எந்த கேரக்டராக இந்தாலும் அப்படியே அதற்குப் பொருந்திப்போய்விடுவார் தனுஷ். பிரபுசாலமன் இயக்கத்தில் நடிக்கும் படத்திலும், தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரமான பூச்சியப்பனாகவே மாறியிருக்கிறாராம் தனுஷ். சென்னையிலிருந்து டெல்லி செல்லும் ரயிலில் டீ விற்கும் ஆளாக நடிக்கும் தனுஷிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ‘டச்அப் கேர்ள்’ சரோஜா கேரக்டர் "கீர்த்தி சுரேஷ்"க்கு கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இமான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரயிலிலேயே படமாக்கப்பட்டிருப்பதாலும், படத்தின் கதைக்களத்தோடு ரயில் சம்பந்தப்பட்டிருப்பதாலும், இப்படத்திற்கு ‘ரயில்’ என்ற பெயரை வைக்கலாமா என்று யோசித்து வருகிறோம் என இயக்குனர் பிரபுசாலமன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். ஆனால், ‘ரயில்’ என்ற டைட்டிலுக்கு வரிச்சலுகை கிடைக்காது என்பதால், படத்திற்கு வேறொரு தமிழ் பெயரையும் பரிசீலனையில் வைத்திருக்கிறார்களாம். அந்தப் பெயர் ‘மிரட்டு’. தனுஷும் பிரபுசாலமனும் இணைந்து ‘ரயில்’ விடுவார்களா? அல்லது ‘மிரட்டு’வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’....
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள...
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பட்டாஸ்’. இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ்...