மீண்டும் படத்தை இயக்க வரும் 86 வயது இயக்குனர்!

மீண்டும் படத்தை இயக்க வரும் 86 வயது இயக்குனர்!

செய்திகள் 9-Jan-2016 12:07 PM IST VRC கருத்துக்கள்

சிவாஜி, ரஜினி, கமல், முத்துராமன், ஜெய்சங்கர், ஜெமினி கணேசன், பாண்டியராஜன் உட்பட பல நடிகர்களை வைத்து படம் தயாரித்து இயக்கியவர் முக்தா.வி.சீனிவாசன். இவருக்கு இப்போது 86 வயது! பழம்பெரும் இயக்குனரான இவர் திரைப்பட துறைக்கு வந்து 70 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 25 வருடங்களாக படம் இயக்குவதை நிறுத்தி வைத்திருந்த முக்தா சீனிவாசன் மீண்டும் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.

ஸ்ரீராமானுஜரின் வாழ்கையை தழுவி எடுக்கவிருக்கும் இப்படத்திற்கு ‘மனித நேயர் ராமானுஜர்’ என்று டைட்டில் வைத்துள்ளார். பிராமணர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் செல்லலாம் என்கிற கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்த முதல் ஆள் ராமானுஜர். அவரை பற்றி எடுக்கப்படும் இப்படத்தில் ராமானுஜராக புதுமுகம் ஒருவரை நடிக்க வைக்க உள்ளார் முக்தா சீனிவாசன். இது அவர் இயக்கும் 45 படமாம். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கி மூன்றே மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளாராம். ஸ்ரீபெரும்பத்தூர், கல்யாணபுரம், கோவிலடி, திருக்கோவிலூர், ஸ்ரீரங்கம் போன்ற இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;