விக்ரம் - நயன்தாராவின் ‘இரு முகன்’

விக்ரம் - நயன்தாராவின் ‘இரு முகன்’

செய்திகள் 11-Jan-2016 10:13 AM IST Chandru கருத்துக்கள்

‘10 எண்றதுக்குள்ள’ படம் நினைத்த வெற்றியைப் பெறாததால் தன் அடுத்த படத்தின் கதையை பார்த்துப் பார்த்து தேர்வு செய்திருக்கிறார் ‘சியான்’ விக்ரம். ‘அரிமா நம்பி’ புகழ் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டிருந்தது. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக முதல்முறையாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் நித்யாமேனனும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘இரு முகன்’ என்ற வித்தியாசமான டைட்டிலை வைத்திருக்கிறார்கள்.

டைட்டிலையும், போஸ்டர் வடிவமைப்பையும் பார்க்கும்போது படத்தில் விக்ரம் இரண்டு வித்தியாசமான வேடங்களில் தோன்றலாம் எனவும், இப்படத்தின் கதைக்களத்தில் ஆராய்ச்சிக்கூடம் அல்லது கெமிக்கல் விளைவுகள் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் என்றும் தோன்றுகிறது. ஷிபு தமீன்ஸ் தயாரிக்கும் ‘இரு முகன்’ படத்திற்கு ஒளிப்பதிவை ஆர்.டி.ராஜசேகரும், இசைப்பணிகளை ஹாரிஸ் ஜெயராஜும் கவனிக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆதித்ய வர்மா ட்ரைலர்


;