குன்னூரில் ஜீவாவின் ‘கவலை வேண்டாம்’

குன்னூரில் ஜீவாவின் ‘கவலை வேண்டாம்’

செய்திகள் 18-Jan-2016 10:54 AM IST VRC கருத்துக்கள்

‘விண்ணைத் தாண்டி வருவாயா, ‘ யாமிருக்க பயமே’ உள்பட பல படங்களை தயாரித்த ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான 'கவலை வேண்டாம்' படத்தின் படப்பிடிப்பு இன்று குன்னூரில் துவங்கியது. இந்த படத்தில் ஜீவா, பாமி சிம்ஹா கதாநாயகர்களாக நடிக்க, ஜீவாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இவர்களூடன் ‘144’ படத்தின் மூலம் அறிமுகமான சுருதி ராமகிருஷ்ணன், மற்றும் மந்த்ரா, ஆர்.ஜே.பாலாஜி, பாலசரவணன், மயில்சாமி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கின்றனர். ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டிகே இயக்கும் இப்படம் மனித உணர்வுகளை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாம். ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் மற்றொரு படம் ‘கோ-2’. இந்த படத்திற்கு இசை அமைக்கும் லியான் ஜேம்ஸ் தான் கவலை வேண்டாம் படத்திற்கும் இசை அமைப்பாளர். கே.வி.ஆனந்திடம் உதவியாளராக இருந்த அபிநாதன் இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். ஜீவாவும், காஜல் அகர்வாலும் முதன் முதலாக இணைந்து நடிக்கும் படம் இது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;