சிம்பு, விக்ரம் பிரபுவை தொடர்ந்து உதயநிதி!

சிம்பு, விக்ரம் பிரபுவை தொடர்ந்து உதயநிதி!

செய்திகள் 20-Jan-2016 1:41 PM IST VRC கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வரும் மஞ்சிமா மோகனுக்கு தனது முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னதாகவே வேறு இரண்டு படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’ படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் அடுத்து இயக்கும் படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடி மஞ்சிமா மோகன் தான். ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த படம் தவிர உதயநிதி ஸ்டாலின் கதையின் நாயகனாக நடிக்க, சுசுசீந்திரன் இயக்கும் படத்திலும் மஞ்சிமா தான் ஹீரோயின்! இந்த படத்தில் சுசீந்திரனின் ஆஸ்தான நடிகரான விஷ்ணுவிஷாலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜையும் இன்று காலை சென்னையில் நடந்தது. உதயநிதி நடிப்பில் இதுவரை வெளியாகிய அத்தனை படங்களுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசை அமைப்பாளர்! ஆனால் உதயநிதி தற்போது நடித்து வரும் ஹிந்தி ‘ஜாலி எல்.எல்.பி.’ தமிழ் ரீ-மேக் ஆன ‘மனிதன்’ படத்திற்கு இசை அமைப்பாளராக சந்தோஷ் நாராயணனை கமிட் செய்துள்ள உதயநிதி, சுசீந்திரன் இயக்கத்தில் தயாரித்து, நடிக்கும் படத்திற்கு டி.இமானை இசை அமைப்பாளராக்கியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவராட்டம் ட்ரைலர்


;