வித்தியாசமான வேடத்தில் தனுஷ் நடிக்கும் ‘ஹாலிவுட்’ படம்!

வித்தியாசமான வேடத்தில் தனுஷ் நடிக்கும் ‘ஹாலிவுட்’ படம்!

செய்திகள் 25-Jan-2016 10:28 AM IST Chandru கருத்துக்கள்

கோலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருக்கும்போதே ‘ரான்ஜ்னா’ படம் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்தார் தனுஷ். அதோடு, அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான பாலிவுட் விருதையும் வென்று வடஇந்திய ரசிகர்களுக்கும் பரிச்சயமானார். ஏற்கெனவே ‘கொலவெறி’ பாடல் தந்த தனுஷிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்போது நேரடி ஹாலிவுட் படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

இராணியன் & பிரெஞ்ச் பெண் இயக்குனரான மார்ஜனே சட்ரபியின் இயக்கத்தில் உருவாகும் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் ஹு காட் டிராப்டு இன் தி கியா கப்போர்டு’ (The Extraordinary Journey of the Fakir who got trapped in the Ikea cupboard) என்ற படத்தில் மந்திர தந்திரங்கள் மூலம் பேய்களை விரட்டுபவராக நடிக்கிறாராம் தனுஷ். தன் அம்மாவின் கோரிக்கைக்காக டெல்லியிலிருந்து பாரிஸ் சென்று அங்கே ரகசியமான மிஷன் ஒன்றை முடிப்பதுதான் இப்படத்தில் தனுஷிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலையாம். ஹாலிவுட் நடிகைகள் உமா தர்மன், அலெக்ஸாண்ட்ரா தத்தாரியோ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, மொராக்கோ உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தவிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;