கௌதம் + ஜெயம் ரவி + அனிருத் : சர்ப்ரைஸ் கூட்டணி!

கௌதம் + ஜெயம் ரவி + அனிருத் : சர்ப்ரைஸ் கூட்டணி!

செய்திகள் 25-Jan-2016 6:42 PM IST Chandru கருத்துக்கள்

‘என்னை அறிந்தால்’ படத்தைத் தொடர்ந்து தற்போது சிம்பு, மஞ்சிமா நடிக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் கௌதம் மேனன். இப்படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், தற்போது இரண்டு புதிய படங்களை இயக்குவதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறாராம் கௌதம். இந்த இரண்டு படங்களையுமே எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் மதன் தயாரிக்கவிருக்கிறார். ஏற்கெனவே மதனும், கௌதமும் இணைந்து ‘போட்டோன் கதாஸ்’ நிறுவனம் மூலம் படங்களை தயாரித்துள்ளனர். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் வரை இந்தக் கூட்டணி தொடர்ந்தது. அதன்பிறகு ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோகஷன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்கிய மதன், தற்போது தனியாக படங்களை தயாரித்து வருகிறார். தற்போது மீண்டும் மதனும், கௌதமும் இணைந்து கலக்கவிருக்கிறார்கள்.

இரண்டு படங்களில் ஒன்றில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறாராம். இன்னொரு படத்தில் தமிழ் சினிமாவின் முக்கியமான ஹீரோ ஒருவரை இயக்கவிருக்கிறார் கௌதம் மேனன். அந்த ஹீரோ யார் என்ற தகவல் தெரியாவிட்டாலும், ‘இந்த இருவரும் இணைவது இதுவே முதல்முறை’ என்ற கூடுதல் தகவல் மட்டும் நமக்குக் கிடைத்தது. விரைவில் இந்த 2 படங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரலாம் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;