மாதவன் இடத்தைப் பிடித்த வெங்கடேஷ்!

மாதவன் இடத்தைப் பிடித்த வெங்கடேஷ்!

செய்திகள் 29-Jan-2016 10:33 AM IST VRC கருத்துக்கள்

இன்று வெளியாகும் ‘இறுதிச்சுற்று’ படத்தின் பத்திரிகையாளர் காட்சியும், வி.ஐ.பி.க்களுக்கான ஸ்பெஷல் பிரீமியர் ஷோவும் நேற்று சென்னையில் நடைபெற்றது. விமர்சன ரீதியாக பத்திரிகையாளர் மத்தியில் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதோடு, கமர்ஷியல் ரீதியாகவும் இப்படம் பெரும் வெற்றி பெறும் என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியாகும் இப்படம் விரைவில் தெலுங்கிலும் ரீ-மேக் ஆகவிருக்கிறது. தமிழ், ஹிந்தியில் மாதவன் நடித்த கேரக்டரில் தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்க உள்ளார். ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதாவே தெலுங்கிலும் இயக்கவுள்ளார். தமிழ், ஹிந்தியில் கதையின் நாயகியாக நடித்த ரிதிகா சிங் கேரக்டரில் தெலுங்கிலும் அவரே நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரொக்கெற்றி - தி நம்பி effect டீஸர்


;