நட்புக்காக உருவான படம் ‘சேது பூமி’

நட்புக்காக உருவான படம் ‘சேது பூமி’

செய்திகள் 29-Jan-2016 12:29 PM IST VRC கருத்துக்கள்

‘அய்யன்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி இயக்கியுள்ள படம் ‘சேது பூமி’. ‘ராயல் மூன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சாபிரல் எம்.ஏ.ஹபீப் தயாரித்திருக்கும் இப்படத்தில் தமன் ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயினாக சமஸ்கிருதி நடித்துள்ளார். இவர்களுடன் சிம்கம் புலி, ராஜலிங்கம், ஜூனியர் பாலையா, சேரன்ராஜ், கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், தவசி ஆகியோரும் நடித்துள்ளனர். அடுத்த மாதம் ரிலீசாகவிருக்கும் இப்படம் குறித்து இயக்குனர் கேந்திரன் முனியசாமி கூறும்போது,

‘‘பொதுவாக ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய பகுதி மக்களிடம் வறுமையும், கோபமும் தான் இருக்கும். அந்த கோபத்திற்கான நியாயம் அவர்களுடைய வாழக்கை முறை ஆகியவற்றை இப்படத்தின் மூலம் விவரிக்கிறோம். மனிதன் தனது உறவுகளையும், உணர்வுகளையும் வேகமாகவே மறந்து வருவது இந்த சமூகத்திற்கு மிகப் பெரிய கேடு! மனித பிறப்பும், இறப்பும் இறைவன் கையில்! அதை நாம் கையில் எடுத்தால் என்ன நடக்கும் என்று கூறும் படமே ‘சேது பூமி’’ என்றார்.
தமிழ் சினிமாவில் வியாபாரத்தை தாண்டி சிலர் வேறு சில காரணங்களுக்காக திரைப்படங்களை தயாரிக்க வருகிறார். அந்த வகையில் தனது சிறுவயது நட்புக்காக ஒருவர் படம் தயாரிக்க வந்திருக்கிறார். அவர் தான் இப்படத்தின் தயாரிப்பாளர் எம்.ஏ.ஹபீப். இது குறித்து ஹபீப் கூறும்போது,

‘‘பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நான் இப்படத்தை தயாரிக்கவில்லை. இயக்குனர் கேந்திரன் முனியசாமி எனது பள்ளி நண்பனின் தம்பி. இவரை நான் ஒரு வேலைக்காக அழைத்தபோது, ‘சினிமா தான் என் உயிர் மூச்சு, சினிமாவில் நான் வெற்றிபெற வேண்டும், அது தான் என் லட்சியம்’ என்றார்! அவருக்கு உதவி செய்யவே நான் இப்படத்தை தயாரிக்க முன் வந்தேன்’’ என்றார்.

‘சேது பூமி’யின் ஒளிப்பதிவு பொறுப்பை எஸ்.முத்துராமலிங்கம் கவனித்திருக்க, பாரதி, மோனிஷ் என்ற இரட்டையர்கள் இசை அமைத்துள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கண்ணாடி ட்ரைலர்


;