45 காமெடி நடிகர்கள் நடிக்கும் படம்!

45 காமெடி நடிகர்கள் நடிக்கும் படம்!

செய்திகள் 29-Jan-2016 12:41 PM IST VRC கருத்துக்கள்

‘திருட்டு விசிடி’ படத்தின் மூலம் இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ‘காதல்’ சுகுமார் அடுத்து இயக்கும் படத்திற்கு ‘சும்மாவே ஆடுவோம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘ஸ்ரீரங்கா புரொடக்‌ஷன்’ சார்பில் டி.என்.ஏ.ஆனந்தன் தயாரிக்கும் இப்படத்தில், தற்போது நலிவடைந்து வரும் கூத்து கலை பற்றியும் கலைஞர்கள் பற்றியும் சொல்லப்படுகிறது. அருண்பாலாஜி கதையின் நாயகனாக நடிக்க, லீமா பாபு கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் டி.என்.ஏ.ஆனந்தன், அர்ஜுன், பாலா சிங், பாண்டு, ராபர்ட், யுவரானி, கொட்டாச்சி, போண்டா மணி, உதயா, மனோ, ரவி, சுஜித், அம்மு ஆகியோர் உட்பட 45 காமெடி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘சும்மாவே ஆடுவோம்’ படத்தின் ஒளிப்பதிவாளராக வில்லியம்ஸ் பணியாற்ற, ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். ஈரோடு, கோபி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ள இப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஷாலின் திருட்டு VCD ரெய்டு - வீடியோ


;