‘வேதாளம்’ ரீமேக் : பவர்ஸ்டாரை இயக்குகிறாரா எஸ்.ஜே.சூர்யா?

‘வேதாளம்’ ரீமேக் : பவர்ஸ்டாரை இயக்குகிறாரா எஸ்.ஜே.சூர்யா?

செய்திகள் 1-Feb-2016 10:31 AM IST Chandru கருத்துக்கள்

ஒரு படம் ஹிட்டானால் போதும், அது பக்கத்து பக்கத்து மாநிலங்களில் விறுவிறுவென வேறு மொழி பேசிவிடும். குறிப்பாக, தமிழ் வெற்றிப்படம் தெலுங்கிலும், தெலுங்கு வெற்றிப்படம் தமிழிலும் அதிகமாக ரீமேக் செய்யப்படுகிறது. சமீபகாலமாக இந்த ரீமேக் பட்டியலில் மலையாள படங்களும் அதிக இடங்களைப் பிடிக்கின்றன. கடந்த தீபாவளிக்கு வெளியான அஜித்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான ‘வேதாளம்’ விரைவில் தெலுங்கில் ரீமேக் ஆகவிருக்கிறதாம்.

சென்டிமென்ட், ஆக்ஷன், காமெடி என எல்லா விஷயங்களையும் கலந்து ‘வீரம்’ சிவா இயக்கியிருந்த ‘வேதாளம்’ படத்தை தெலுங்கில் அனேகமாக எஸ்.சூர்யா இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் நடித்த கேரக்டரில் நடிக்க ‘பவர்ஸ்டார்’ பவன் கல்யாணிடம் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இதற்காக சமீபத்தில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பவன் கல்யாணை நேரில் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது. எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் ‘புலி’ என்ற தெலுங்குப் படத்தில் ஏற்கெனவே நடித்திருக்கிறார் பவன் கல்யாண்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நேர்கொண்ட பார்வை டிரைலர்


;