பிரதாப் போத்தன் இயக்கத்தில் துல்கர் சல்மான், மாதவன்?

பிரதாப் போத்தன் இயக்கத்தில் துல்கர் சல்மான், மாதவன்?

செய்திகள் 5-Feb-2016 11:08 AM IST VRC கருத்துக்கள்

‘மீண்டும் ஒரு காதல் கதை’, ‘வெற்றிவிழா’, ‘சீவலப்பேரி பாண்டி’, ‘ஆத்மா’ உட்பட பல தமிழ் படங்களையும் சில மலையாள படங்களையும் இயக்கியவர் பிரதாப் போத்தன். இவர் கடைசியாக இயக்கிய மலையாள படம் ‘ஒரு யாத்ரா மொழி’. சிவாஜி கணேசன், மோகன்லால் இணைந்து நடித்த இப்படம் கடந்த 1995-ல் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து படங்களை இயக்குவதை தவிர்த்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த பிரதாப் போத்தன் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறர். ‘Love In Anjengo’ என்று ஆங்கில பெயர் சூட்டப்பட்டிருக்கும் இப்படம் மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகவிருக்கிறது. இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை ‘பெங்களூர் டேஸ்’ பட புகழ் அஞ்சலி மேனன் எழுதியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தில் கதையின் நாயகனாக துல்கர் சல்மான் நடிக்க, படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரும் உண்டாம்! இந்த கேரக்டருக்கு ‘இறுதிச்சுற்று’ பட ஹீரோ மாதவனிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசை அமைக்க, ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இப்பட்த்தின் படப்பிடிப்பு மே அல்லது ஜூன் மாதம் துவங்கும் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;