‘மிருதனு’க்கு சென்சாரில் எந்த ‘கட்’டும் இல்லை.... ஆனால்?

‘மிருதனு’க்கு சென்சாரில் எந்த ‘கட்’டும் இல்லை.... ஆனால்?

செய்திகள் 8-Feb-2016 10:04 AM IST Chandru கருத்துக்கள்

பொதுவாக பேய்ப் படங்கள் என்றாலே பெரும்பாலும் ஏ அல்லது யு/ஏ சான்றிதழ்தான் சென்சாரில் கிடைக்கும். சிற்சில காமெடிப் பேய் படங்களுக்கு மட்டும் இதில் விதிவிலக்குண்டு. ஆனால், முடிந்தவரை யு/ஏ சான்றிதழாவது வாங்க வேண்டும் என்பதுதான் தயாரிப்பாளர்களின் நோக்கமாக இருக்கும். ஆனால், சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, லக்ஷ்மி மேனன் நடித்திருக்கும் தென்னிந்தியாவின் முதல் ஸோம்பி படமான ‘மிருதனு’க்கு சென்சாரில் ‘ஏ’ கிடைத்துள்ளதாம். இதில் ஒரேயொரு ஆறுதல் படத்தின் எந்தக் காட்சியையும் சென்சார் அதிகாரிகள் தடைசெய்யவில்லை என்பதுதான். இருந்தாலும் இதை யு/ஏ வாக மாற்றுவதற்கு எந்தெந்த காட்சிகளை நீக்கம் செய்யலாம் என்பது குறித்தும் ‘மிருதன்’ டீம் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

2 மணி நேரத்திற்கும் குறைவாகவே ஓடும் ‘மிருதன்’ படம் வரும் 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இதே நாளில் விஜய்சேதுபதியின் ‘சேதுபதி’ படமும் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;