நயன்தாரா இடத்தைப் பிடித்த ராகுல் ப்ரீத் சிங்!

நயன்தாரா இடத்தைப் பிடித்த ராகுல் ப்ரீத் சிங்!

செய்திகள் 9-Feb-2016 10:01 AM IST Chandru கருத்துக்கள்

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி ஆகியோர் நடிப்பில் வெளிவந்து, தமிழில் சூப்பர்ஹிட் வெற்றியைச் சுவைத்த ‘தனி ஒருவன்’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக்காகவிருக்கிறது. தெலுங்கு படத்தின் ஹீரோவாக ராம் சரண் தேஜா ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இப்போது அவருக்கு ஜோடியாக, அதாவது தமிழில் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க ராகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். சுரேந்தர் ரெட்டி இயக்கும் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அரவிந்த் சாமியிடமே வந்திருக்கிறது. சித்தார்த் அபிமன்யூவாக ‘தனி ஒருவன்’ படத்தில் நடித்த அரவிந்த் சாமியின் பங்களிப்பு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமென்பதால், தெலுங்கிலும் அவரை நடிக்க அழைத்திருக்கிறார்கள். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறதாம். மார்ச் மாத இறுதியில் ராகுல் ப்ரீத் சிங் தனக்கான படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;