விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர்ஹிட் திரைப்படமான ‘கோலி சோடா’வில் வில்லனாக அறிமுகமானவர் மதுசூதன் ராவ். இப்படத்தைத் தொடர்ந்து ஜீவா, வன்மம், மாசு என்கிற மாசிலாமணி, தனி ஒருவன், கதகளி ஆகிய படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற வில்லனாக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்போது ‘ஜாக்பாட் வாய்ப்பு’ ஒன்று மதுசூதனுக்கு வந்திருக்கிறது. ஆம்... இந்தியாவின் பிரம்மாண்ட படங்களில் ஒன்றான எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு மதுசூதனுக்குக் கிடைத்திருக்கிறது. இப்படத்தில் போர்க்காட்சிகள் உட்பட ஆறேழு காட்சிகளில் மதுசூதன் தோன்றுவதற்கான வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
உலகம் முழுக்க வெளியாகி பெரும் வசூல் குவித்த ’பாகுபலி’ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில்...
’பாகுபலி’, ‘பாகுபலி-2’ ஆகிய படங்களை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் படம் ‘சாஹோ’. தமிழ், தெலுங்கு, ஹிந்தி...
பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் முத்தையா முரளீதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது என்றும் இதில்...