தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கும் ‘மாயவன்’

தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கும் ‘மாயவன்’

செய்திகள் 16-Feb-2016 10:27 AM IST Top 10 கருத்துக்கள்

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானது சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம். இப்படத்தைத் தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், வில்லா, தெகிடி, முண்டாசுப்பட்டி, சரபம், எனக்குள் ஒருவன், இன்று நேற்று நாளை, 144 உட்பட பல படங்களை தயாரித்தது. சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘இறுதிச்சுற்று’ படத்தை இணைந்து தயாரித்தவர்களில் சி.வி.குமாரும் ஒருவர். தயாரிப்பாளராக தொடர்ந்து வெற்றிபெற்று வரும் சி.வி.குமார் இப்போது இயக்குனராகவும் களமிறங்கியிருக்கிறார்.

கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் தயாரிப்பில், சி.வி.குமார் இயக்குனராக அறிமுகமாகும் படத்திற்கு ‘மாயவன்’ எனப் பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷான் நாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே தமிழில் ‘யாருடா மகேஷ்’ என்ற படத்தில் நடித்ததோடு இல்லாமல், பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘மாநகரம்’ படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். சந்தீப்புக்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி, பகவதி பெருமாள் (பக்ஸ்), ஜேபி, மைம் கோபி, பாபு ஆண்டனி ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இயக்குனர் நலன் குமார்சாமி இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனம் எழுதுகிறார். படத்தொகுப்பு லியோ ஜான் பால்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் இனிதே துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அதே கண்கள் - டீசர்


;