சென்னை திரும்பினார் கபாலி!

சென்னை திரும்பினார் கபாலி!

செய்திகள் 16-Feb-2016 10:29 AM IST VRC கருத்துக்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கபாலி’ படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மலேசியாவில் நடந்து வந்தது. இந்த படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் நேற்று மாலை சென்னை திரும்பினார். பா.ரஞ்சித் இயக்கி வரும் ‘கபாலி’யில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் ரவி, கிஷோர் முதலானோர் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ‘கலைப்புலி’ எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை கோடை விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ‘கபாலி’யின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிவடைந்ததை தொடர்ந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் பிசியாகியுள்ளனர் படக்குழுவினர். ‘கபாலி’யின் அனைத்து படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளதால் இனி ரஜினிகாந்த் ஷங்கரின் ‘2.0’ படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொள்ளவிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;