‘வில் அம்பு’க்கு கூடுதல் தியேட்டர்கள்!

‘வில் அம்பு’க்கு கூடுதல் தியேட்டர்கள்!

செய்திகள் 16-Feb-2016 10:58 AM IST VRC கருத்துக்கள்

ஸ்ரீ, ஹரிஷ் கல்யான், சிருஷ்டி டாங்கே, சம்ஸ்க்ருதி, சாந்தினி முதலானோர் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘வில் அம்பு’. சுசீந்திரன் தயாரித்த இப்படத்தை அவரது சிஷ்யர் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கியிருந்தார். இரண்டு ஹீரோக்களை வைத்து மாறுபட்ட ஒரு பாணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு, இயக்கியிருந்தார் ரமேஷ் சுப்பிரமணியம். வித்தியாசமான திரைக்கதை அமைப்பில் வெளிவரும் படங்களை வரவேற்கும் ரசிகர்கள் ‘வில் அம்பு’ படத்திற்கும் வரவேற்பு கொடுத்து படத்தை வெற்றிபெற செய்திருக்கிறார்கள். முதலில் குறைந்த அளவிலான தியேட்டர்களிலேயே ‘வில் அம்பு’ படம் திரையிடப்பட்டது. இப்போது படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் மேலும் 30-க்கும் மேற்பட்ட தியேட்டர்களை ‘வில் அம்பு’க்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக இப்படக் குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நேர்கொண்ட பார்வை டிரைலர்


;