கார்த்திக் சுப்புராஜ் + உதயநிதி : ஆச்சரியக் கூட்டணி!

கார்த்திக் சுப்புராஜ் + உதயநிதி : ஆச்சரியக் கூட்டணி!

செய்திகள் 17-Feb-2016 10:10 AM IST Chandru கருத்துக்கள்

‘இவருடைய இயக்கத்தில் இவர் நடித்தால் நன்றாக இருக்கும்’ என ஒவ்வொரு ரசிகனும் தனக்கென ஒரு பிடித்தமான கூட்டணியை மனதளவில் யோசித்து வைத்திருப்பான். ஆனால், ரசிகர்கள் யாருமே யோசிக்காத வண்ணம் சில நேரங்களில் சில கூட்டணிகள் அமைந்துவிடுவதுதான் சினிமாவில் வாடிக்கை. அப்படி ஒரு கூட்டணியை அமைத்திருக்கிறார்கள் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும், நடிகர் உதயநிதியும்.

பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி என முதல் மூன்று படங்களையுமே வித்தியாசமாகக் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து என கமர்ஷியல் ஹீரோவாக நடித்துவரும் உதயநிதி நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி கோடம்பாக்கத்தை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டணியில் உருவாகவிருக்கும் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்குரி ட்ரைலர்


;