‘அந்நியன்’ விக்ரமாக மாறிய சிவகார்த்திகேயன்!

‘அந்நியன்’ விக்ரமாக மாறிய சிவகார்த்திகேயன்!

செய்திகள் 17-Feb-2016 6:06 PM IST Chandru கருத்துக்கள்

படத்திற்குப் படம் அடுத்தடுத்த உச்சங்களுக்கு நகர்ந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் இப்போது நடித்துவரும் படத்தின் தலைப்பை, சிவகார்த்திகேயனின் பிறந்த தினமான இன்று அறிவித்திருக்கிறார். படத்தின் தலைப்பு ‘ரெமோ’. ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர்ஹிட் திரைப்படமான ‘அந்நியனி’ல் விக்ரமின் கேரக்டர் பெயர் ‘ரெமோ’. தற்போது அந்தப் பெயரையே சிவகார்த்திகேயன் படத்திற்குச் சூட்டியிருக்கிறார்கள். ஹேப்பி பர்த்டே ‘ரெமோ’.

‘24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ பட நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இயக்குனர் அட்லியிடம் அசிஸ்டென்டாக இருந்த பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் ஒளிப்பதிவுக்கு பி.சி.ஸ்ரீராம், இசைக்கு அனிருத், கலை இயக்கத்திற்கு முத்துராஜ், சவுன்ட் டிசைனுக்கு ஆஸ்கர் விருதுபெற்ற ரசூல் பூக்குட்டி என பெரும் கூட்டணி அமைத்துள்ளார்கள். ‘ரஜினி முருகன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ்தான் இப்படத்திலும் அவருக்கு ஜோடி. இப்படத்தில் வித்தியாசமான தோற்றங்களில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு தோற்றமாக பெண் நர்ஸ் வேடத்தில் நடிப்பதாகவும் கூடுதல் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் எதுவும் வெளிவராத நிலையில், இதுபோன்ற தகவல்களே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரிக்கச் செய்து கொண்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;