நடிகர்கள் விஜய்யும், விஷாலும் ஆஃப் ஸ்கிரீன் நண்பர்கள். ஆனாலும், களத்தில் போட்டி என்று வந்துவிட்டால் விஜய் படத்துடன் தன் படத்தை தைரியமாக களமிறக்குவார் விஷால். 2007ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு விஜய்யின் ‘போக்கிரி’ படம் வெளியான அதே சமயத்தில், தன் படம் ‘தாமிரபரணி’யை களமிறக்கினார் விஷால். அதைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு தீபாவளிக்கு விஜய்யின் ‘கத்தி’ வெளியான அதே அக்டோபர் 22ஆம் தேதி விஷாலின் ‘பூஜை’ படமும் வெளியானது. இப்போது மீண்டும் விஜய் படத்துடன் தன் படத்தை களமிறக்குகிறார் விஷால்.
‘கதகளி’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘மருது’ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் விஷால். இப்படத்தை ‘கொம்பன்’ முத்தையா இயக்குகிறார். விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே விஜய்யின் ‘தெறி’ படமும் இதேநாளில் வெளியிடத் திட்டமிடப்பட்டு வருகிறது. ஒருவேளை இரண்டு படங்களும் ரிலீஸாகும் பட்சத்தில் 2007, 2014ஆம் ஆண்டைப்போல விஜய், விஷால் ரசிகர்களுக்கு மீண்டும் இது சந்தோஷமாக அமையும்.
அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...