ஐ ரோபோட், நோயிங் வரிசையில் ‘காட்ஸ் ஆஃப் எகிப்து

ஐ ரோபோட், நோயிங் வரிசையில் ‘காட்ஸ் ஆஃப் எகிப்து

செய்திகள் 20-Feb-2016 10:15 AM IST Chandru கருத்துக்கள்

I Robot (2004), Knowing(2009) ஆகிய குறிப்பிடத்தக்க படங்களை இயக்கி உள்ள Alex Proyas இயக்கி உள்ள படம் GODS OF EGYPT. எகிப்து புராணக்கதைகளை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி உள்ளார்கள்.

வெளிச்சமும் இருளும் மாறி மாறி உலகில் வருவது போன்று, நல்லவர் உள்ள இடங்களில் தீயவர்களும் இருப்பது வாடிக்கை. வெளிச்சத்தின் பிரதிபலிப்பாக Horus (Nikolaj Coster) என்கிற கடவுள் மக்களை காத்து நிற்க, Set (Gerald Butler), இருளின் பிம்பமாக Egypt மக்களை அச்சுறுத்தி அடக்குமுறையை கையாண்டு, நாட்டை தன் வசப்படுத்தி கொடுங்கோலனாக செயல்படுகிறார்!

மக்கள், கொடுமைக்கும் சித்திரவதைக்கும் ஆளாக்கபடுகிறார்கள். சாகா வரம் பெற்ற வீரன் என போற்றப்படும் Bek(Brenton Thwaites), Horus இன் அருளாயும் தோழமையும் தாங்கி, Setஐ எதிர்த்து புறப்படுகிறான். Set ஐ வெற்றி கொண்டு, தன் காதலையும் காப்பாற்றி கொள்கிறான்.

I Robot, Knowing ஆகிய இரு படங்களிலும் Alex உடன் பணியாற்றிய இசையமைப்பாளர், Marco Betrami தான் இப்படத்திற்கும் இசை அமைத்துள்ளார். Peter Menzies Junior ஒளிப்பதிவை கையாள, Richard Learoyd படத்தை தொகுத்துள்ளார். $140 million அமெரிக்க டாலர்கள் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தின் ரன்னிங் டைம் 127 நிமிடங்கள். Viacom 18 நிறுவனம் இப்படத்தை இந்தியாவில் பிப்ரவரி 26ல் வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;