சித்திக் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறாரா?

சித்திக் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறாரா?

செய்திகள் 20-Feb-2016 11:45 AM IST VRC கருத்துக்கள்

மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் சித்திக் இயக்கிய மளையாள படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ரீ-மேக் செய்ய பலத்த போட்டி ஏற்பட்டது. ஆனால் இந்த கதையை தமிழ், ஹிந்தி மொழிகளில் சித்திக்கே இயக்க முடிவு செய்துள்ளார். இந்நிலையில் சென்னையில் இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த், தனக்கு படம் மிகவும் பிடித்து விட்டதாகவும், தமிழில் ரீ-மேக் செய்வதாக இருந்தால் மம்முட்டி நடித்த பாத்திரத்தில் நடிக்க தான் தயார் என்றும் கூறியிருக்கிறார். அதன் பிறகு ரஜினிகாந்த் ‘கபாலி’, ‘2-.0’ ஆகிய படங்களில் கமிட் ஆகி நடிக்கத் துவங்கினார். இந்நிலையில் இயக்குனர் சித்திக் சமீபத்தில் மலையாள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தில் ரஜினி நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பது உண்மை என்றும், இப்போது அவர் நடித்து வரும் படங்கள் முடியும் வரையில் காத்திருக்கச் சொல்லியிருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார். இதனால் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தின் தமிழ் ரீ-மேக்கில் ரஜினி நடிக்க இருக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இது குறித்து நாம் இயக்குனர் சித்திக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவரும் அதை உறுதி செய்தார். தற்போது லால் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘கிங் லயர்’ என்ற படத்திற்கு திரைக்கதை எழுதியிருக்கும் சித்திக், ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தை தமிழில் இயக்கிய பிறகு ஹிந்தியிலும் அதனை இயக்க திட்டமிட்டுள்ளார். தமிழில் ‘ஃப்ரெண்ட்ஸ்’, ‘எங்கள் அண்ணா’, ‘சாது மிரண்டா’ ‘காவலன்’ ஆகிய படங்களை இயக்கியவர் சித்திக் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;