பி.சி.ஸ்ரீராம் வெளியிட்ட மியாவ்!

பி.சி.ஸ்ரீராம் வெளியிட்ட மியாவ்!

செய்திகள் 20-Feb-2016 2:32 PM IST VRC கருத்துக்கள்

ஒரு பூனையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படம் ‘மியாவ்’. விளம்பர படத்துறையில் அனுப்வம் பெற்ற சின்னாஸ் பழனிச்சாமி இயக்கும் இப்படத்தில் புதுமுகம் ராஜா நாயகனாக நடிக்க, காயத்ரி, ஷினி ஆகிய இரண்டு பேர் நாயகிகளாக நடிக்கின்றானர். சமூகம், கலை மற்றும் வியாபார உலகில் பிரபலமானவரான வின்சென்ட் அடைக்கல ராஜ், தனது ‘ குளோபல் வுட்ஸ் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். அறிமுக இசை அமைப்பாளர் ஸ்ரீஜித் என்டவனோ இசை அமைக்கும் இப்படம் குறித்து இயக்குனர் சின்னாஸ் பழனிச் சாமி கூறும்போது,

‘‘ஒரு பூனையின் மியாவ் சத்தத்தில் மென்மை, அலறல், திகில் என பல்வேறு வகை உண்டு! அதை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பூனையை அடிப்படையாகக் கொண்டு வரும் முதல் தமிழ் திரைப்படம் இதுவென்று நினைக்கிறேன். இந்த ‘மியாவ்’ ரசிகர்களுக்கு வித்தியாசமான படமாக அமையும். இப்படத்தின் போஸ்டரை நாங்கள் பெரும் மதிப்பு வைத்திருக்கும் ஒளிப்பதிவு மேதை பி.சி.ஸ்ரீராம வெளியிட்டதில் எங்களுக்கெல்லாம் மிகப் பெரிய பெருமை’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;