‘ஒரு நாள் கூத்து’க்கு க்ரீன் சிக்னல்!

‘ஒரு நாள் கூத்து’க்கு க்ரீன் சிக்னல்!

செய்திகள் 22-Feb-2016 4:14 PM IST VRC கருத்துக்கள்

‘திருடன் போலீஸ்’ படத்தை தயாரித்த ‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ செல்வகுமார் தயாரித்துள்ள படம் ‘ஒரு நாள் கூத்து’. அறிமுக இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இப்படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெதுராஜ், கருணாகரன், ரித்விகா, பாலசரவணன், ரமேஷ் திலக், ராமதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘ஆரஞ்சு மிட்டாய்’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்த ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். அனைத்து வேலைகளும் முடிவடைந்துள்ள இப்படம் விரைவில் ரிலீஸாகவிருப்பதை முன்னிட்டு சென்சார் குழுவினரின் பார்வைக்கு சென்றது. ‘ஒரு நாள் கூத்து’ படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்தில் எந்த ‘கட்’டும் சொல்லாமல் அனைவரும் பார்க்க கூடிய படம் என்ற வகையில் படத்திற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். தங்களது படத்திற்கு எதிர்பார்த்தது மாதிரியே ‘யு’ சர்டிஃபிக்கெட் கிடைத்திருப்பதால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள் இப்படக் குழுவினர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மான்ஸ்டர் - டீஸர்


;