பிரம்மாண்ட ரிலீஸ் ப்ளானில் அதர்வாவின் ‘கணிதன்’

பிரம்மாண்ட ரிலீஸ் ப்ளானில் அதர்வாவின் ‘கணிதன்’

செய்திகள் 23-Feb-2016 3:16 PM IST VRC கருத்துக்கள்

‘கலைப்புலி’ எஸ்.தாணுவின் ‘வி.கிரியேஷன்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் ‘கணிதன்’. அதர்வா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை டி.என்.சந்தோஷ் இயக்கியிருக்கிறார். அதர்வா நடிப்பில் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘ஈட்டி’. இப்படத்தில் ஓட்டப் பந்தய வீர்ராக நடித்திருந்தார் அதர்வா! இந்த படத்தை தொடர்ந்து வருகிற 26-ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘கணிதன்’ படத்தில் நியூஸ் சேனல் ரிப்போர்ட்டராக நடித்துள்ளார் அதர்வா! போலி சர்டிஃபிக்கெட்டுகளை தயாரித்து மோசடி செய்யும் ஒரு குமபலை எதிர்த்து போராடும் ஒரு நேர்மையான பத்திரிகையாளரின் கதையை சொல்லும் படமே ‘கணிதன்’. ‘ஈட்டி’ படத்தில் ஒரு தடகள வீரரின் மேனரிசங்களை அழகாக வெளிப்படுத்தி நடித்திருந்த அதர்வா, ‘கணிதன்’ படத்தில் ஒரு சேனல் ரிப்போர்ட்டரின் கடமைகளை நேர்த்தியாக பிரதிபலித்துள்ளாராம்! இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரெசா நடித்துள்ளார். வில்லனாக தருண் அரோரா நடித்துள்ளார், இவர்களுடன் கே.பாக்யராஜ், மனோபாலா, கருணாகரன், ‘ஆடுகளம்’ நரேன், சுந்தர் ராமு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். ‘டிரம்ஸ்’ சிவமணி இசை அமைத்துள்ளார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘காக்க காக்க’, ‘துப்பாக்கி’ உட்பட பல வெற்றிப் படங்களை தயரித்தவரும், தற்போது ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் ‘கபாலி’ மற்றும் ‘இளைய தளபதி’ விஜய் நடிப்பில் ‘தெறி’ ஆகிய படங்களை பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருபவருமான ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரித்திருக்கும் ‘கணிதன்’ படத்தை வருகிற 26-ஆம் தேதி உலகம் முழுக்க பிரம்மாணமான முறையில் அதிக என்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

‘ஈட்டி’ படத்தை தொடர்ந்து அதர்வா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம், ‘கலைப்புலி’ எஸ்.தாணுவின் பிரம்மாண்ட தயாரிப்பு, ‘டிரம்ஸ்’ சிவமணியின் இசை, அதர்வா, கேத்ரின் தெரெசா முதன் முதலாக இணைந்துள்ள படம் என பல சிறப்புக்களுடன் உருவாகியுள்ள ‘கணிதன்’ படத்தின் டிரைலரும், பாடல்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் வரும் வெள்ளிக் கிழமையன்று வெளியாகவிருக்கிறது ‘கணிதன்’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அருவம் ட்ரைலர்


;