முடிவானது ‘டார்லிங்-2’ ரிலீஸ் தேதி!

முடிவானது ‘டார்லிங்-2’ ரிலீஸ் தேதி!

செய்திகள் 24-Feb-2016 12:58 PM IST VRC கருத்துக்கள்

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’வை தொடர்ந்து ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் வெளியிடவிருக்கும் படம் ‘டார்லிங்-2’ ஏற்கெனவே ‘ஸ்டுடியோ கிரீன்’ தயாரிப்பில் ஜி.பி.பிரகாஷ் குமார் நடித்து சூப்பர் ஹிட்டான ‘டார்லிங்’ பட கதையை போலவே இப்படமும் ஃப்ரெண்ட் ஷிப், ஹாரர், ரொமான்டிக் விஷயங்களை சொல்லும் படமாக அமைந்துள்ளதாம்! இப்படத்தில் ‘மெட்ராஸ்’ பட புகழ் கலையரசன் கதாநாயகனாக நடிக்க, இவருடன் காளி வெங்கட், அர்ஜுனன், ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்த இன்னொரு நடிகரான ஹரி ஆகியோர் நடிக்கிறார்கள். சதீஷ் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். ராதன் இசை அமைத்துள்ளார். அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படம் ஏற்கெனவே சில ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு பிறகு திடீரென்று ரிலீஸை தள்ளி வைத்தார்கள். இப்போது ‘டார்லிங்-2’ வை அடுத்த மாதம் (மார்ச்) 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வமாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெஹந்தி சர்க்கஸ் - ட்ரைலர்


;