வெள்ளிக் கிழமை சூர்யாவின் அவதாரம்!

வெள்ளிக் கிழமை சூர்யாவின் அவதாரம்!

செய்திகள் 2-Mar-2016 10:46 AM IST VRC கருத்துக்கள்

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘24’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து படத்தின் புரொமோஷன் வேலகளும் வேகம் பிடித்துள்ளது. சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் ஃபர்ஸ்ட் ‘லுக்’குக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இப்படத்தின் டீஸரை வருகிற 4-ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) மாலை 6 மணிக்கு வெளியிட இருக்கிறார்கள். இதனை ‘24’ படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான சூர்யா தனது ட்விட்டர் பக்கம் மூலம் உறுதிபடுத்தி உள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் சமந்தா, நித்யா மேனன் முதலானோர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசைஅமைக்கிறர். ‘36 வயதினிலே’, ‘பசங்க-2’ ஆகிய படங்களை தொடர்ந்து தனது ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிக்கும் மூன்றாவது படமான ‘24’ மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;