பிரம்மாண்ட ரிலீஸ் ப்ளானில் ‘மாப்ள சிங்கம்’

பிரம்மாண்ட ரிலீஸ் ப்ளானில் ‘மாப்ள சிங்கம்’

செய்திகள் 7-Mar-2016 1:14 PM IST VRC கருத்துக்கள்

‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் பி.மதன் தயாரித்துள்ள படம் ‘மாப்ள சிங்கம்’. இயக்குனர் எழிலுடன் பணியாற்றி அனுபவம் பெறற ராஜசேகர் முதன் முதலாக இயக்கியுள்ள இப்படத்தில் விமல், அஞ்சலி ஜோடியாக நடித்துள்ளனர். ‘தூங்கா நகரம்’, ‘கலகலப்பு’ ஆகிய படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக விமலும், அஞ்சலியும் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் காமெடிக்கு சூரி இணைந்துள்ளார்! இவர்களுடன் ராதா ரவி, ‘ஆஃபீஸ்’ சீரியல் புகழ் விஷ்ணு, காளி வெங்கட், சாமிநாதன், ராமதாஸ் முதலானோரும் நடித்துள்ளார்கள். அனைத்து வேலைகளும் முடிவடைந்து வருகிற 11-ஆம் தேதி பிரம்மாண்ட ரிலீசுக்கு தயாராகி வரும் இப்படத்திற்கு ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். பாடல்களை யுகபாரதி எழுதியுள்ளார். ‘மாப்ள சிங்கம்’ படம் குறித்து அறிமுக இயக்குனர் ராஜ்சேகர் குறும்போது,

‘‘மாப்ள சிங்கம்’ ஜனரஞ்சக கதையம்சம் கொண்ட படமாக இருக்கும். காதலுக்கும் நகைச்சுவைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அரசியலும் உண்டு! படத்தின் கதைப்படி விமல் அரசியல் பின்னணியை கொண்டவர். வழக்கறிஞரான அஞ்சலியும், விமலும் ஒரு பிரச்சனையில் மாட்டி கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் இருவரும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பது தான் ‘மாப்ள சிங்கம்’ படத்தின் ஒருவரி கதை. அதனை காதல், காமெடி, அரசியல் என கிராமத்து பின்னணியில் வித்தியாசமாக சொல்லியுள்ளோம்.

இதுவரை விமல் நடித்த படங்களிலிருந்து இப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். அதைபோல அவருடைய கெட்-அப்பிலும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். அஞ்சலி போல்டான ஒரு வழக்கறிஞராக நடித்துள்ளார். சூரி, காளி வெங்கட், சாமிநாதன் முதலானோரின் காமெடி காட்சிகள் படத்தில் ஹைலைட்டாக இருக்கும். ‘தென்மேற்கு பருவகாற்று’, ‘நீர்பறவை’ முதலான படங்களில் அருமையான இசையை தந்த என்.ஆர்.ரகுநந்தன் தான் இந்த படத்திற்கும் இசை அமைத்துள்ளார். இப்படத்திற்காக அருமையான ஐந்து பாடல்களை தந்துள்ளார் அவர்! அனைத்து ரக ரசிகர்களுக்குமான படமாக அமைந்துள்ள ‘மாப்ள சிங்கம்’ பிரம்மாண்டமான முறையில் வருகிற 11-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;