கௌதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘இது நம்ம ஆளு’ ஆகிய படங்களில் நடித்து வரும் சிம்பு, அடுத்து ‘வாலு’ படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் இந்த படம் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்து வெற்றிபெற்ற ‘டெம்பர்’ படத்தின் ரீ-மேக் என்றும் கூறப்படுகிறது. இப்படத்திலும் ‘வாலு’ படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்த ஹன்சிகாவே ஜோடியாக நடிக்க இருக்கிறாராம். இந்த படம் தவிர ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்பு. தற்போது ‘இது நம்ம ஆளு’ படத்தை திரைக்கு கொண்டு வருவதிலும், ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் படப்பிடிப்பு வேலைகளிலும் பிசியாக இருக்கும் சிம்பு அடுத்து முதலில் எந்த படத்தில் நடிப்பார் என்பது தெரியவில்லை.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் கல்யாணி பிரியதர்சன், இயக்குனர்கள்...