தேர்தலில் களமிறங்கும் விமல்!

தேர்தலில் களமிறங்கும் விமல்!

செய்திகள் 9-Mar-2016 1:39 PM IST VRC கருத்துக்கள்

நாளை மறுநாள் (11-ஆம் தேதி) பிரம்மாண்டமான முறையில் வெளியாகவிருக்கிறது விமல், அஞ்சலி ஜோடியாக நடித்திருக்கும் ‘மாப்ள சிங்கம்’ திரைப்படம். இதற்கு முன் விமல் நடித்த படங்களை விட இப்படம் அதிக தியேட்டர்களில் வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது. சென்னை தியேட்டர்களை பொறுத்தவரையில் இன்று முதல் முன்பதிவும் துவங்கப்பட்ட இப்படத்தை ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் பி.மதன் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குனர் ராஜசேகர் இயக்கியுள்ளார். இப்படம் குறித்து கதாநாயகன் விமல் கூறும்போது,

‘‘நான் இதுவரை நடித்த படங்களிலிருந்து இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடித்துள்ளேன். இப்படத்தின் கதை தேனி மாவட்டத்தின் பின்னணியில் நடப்பது மாதிரி திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் ராஜசேகர். அதனால் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பும் தேனியிலேயே நடந்துள்ளது. தேனி தவிர சென்னை, ஹைதராபாதிலும் சில காட்சிகளை படமாக்கியுள்ளனர். நான் அரசியல் பின்னணி கொண்ட ஊர் பஞ்சாயத்து தலைவரின் மகனாக நடித்துள்ளேன். அதற்காக இதுவரை இல்லாத மாதிரி கெட்-அப் சேஞ்ச் எல்லாம் செய்து நடித்துள்ளேன். எனக்கு ஜோடியாக வரும் அஞ்சலி வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் கதை படி எங்கள் இரண்டு பேர் சம்பந்தப்பட்டு ஒரு பிரச்சனை வரும். அந்த பிரச்சனையிலிருந்து நாங்கள் எப்படி தப்பிக்கிறோம் என்பது தான் படம். அதற்காக நான் தேர்தலில் நிற்பது மாதிரி எல்லாம் நடித்திருக்கிறேன். இப்படம் காதல், காமெடி, அரசியல் கலந்த ஜனரஞ்சக படமாக இருக்கும். இப்படத்தை தயாரித்திருக்கும் மதன் சாருக்கு இப்படம் மீது பெரும் ஏதிர்பார்ப்பு இருக்கிறது. அதனால் இப்படத்தை பெரிய அளவில் ரிலிஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். ரகுநந்தன் சாரின் இசை, தருண் பாலாஜி சாரின் ஒளிப்பதிவு ஆகியவை இப்படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. அதைப் போல சூரி, காளி வெங்கட், சாமிநாதன், ராமதாஸ் முதலானோர் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகளும் படத்தில் ஹைலைட்டாக இருக்கும். ‘மாப்ள சிங்கம்’ அனைத்து விஷயங்களும் அடங்கிய ஒரு ஜாலியான படமாக இருக்கும்’’ என்றார் விமல்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;