நடிகர் சாய்பிரசாந்த் தற்கொலை!

நடிகர் சாய்பிரசாந்த் தற்கொலை!

செய்திகள் 14-Mar-2016 11:40 AM IST VRC கருத்துக்கள்

‘நேரம்’, ‘தெகிடி’, ‘வடகறி’ உட்பட பல திரைப்படங்களிலும், ‘இளவரசி’, ‘செல்வி’, ‘அண்ணாமலை’ உள்ளிட்ட பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்தவர் சாய்பிரசாந்த். இவருக்கு வயது 30. சென்ற வருடம் தான் இவருக்கு திருமணம் நடந்தது. சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த இவர் குடும்ப தகராறு காரணமாக நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். சின்னத்திரை நடிகர் சங்கத்தில் உறுப்பினரான இவர் நேற்று காலை சாலிகிராமத்தில் நடந்த சின்னத்திரை சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழாவுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சாய் பிரசாந்த் நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். சாய் பிரசாந்தின் தற்கொலை சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரிச்சி - டீசர்


;