‘தெறி’யில் விஜய்யுடன் மோதும் கேரள வில்லன்!

‘தெறி’யில் விஜய்யுடன் மோதும் கேரள வில்லன்!

செய்திகள் 23-Mar-2016 12:16 PM IST VRC கருத்துக்கள்

அட்லி, விஜய் இணைந்துள்ள ‘தெறி’ ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வர, இப்படம் அடுத்த மாதம் 14-ஆம் தேதி உலகம் முழுக்க பிரம்மாண்டமான முறையில் ரிலீசாகவிருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர், பாடல்கள் மற்றும் டிரைலருக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இப்படம் குறித்த வேறு சில புதிய தகவல்களும் கிடைத்துள்ளன. ‘தெறி’யில் விஜய் மூன்று மாறுபட்ட கேரக்டர்களில் தோன்றுகிறார். அதில் ஒரு கேரக்டர் பெயர் ஜோசஃப் குருவிளா! கேரளாவில் பிரசித்தமான இந்த பெயரில் நடிக்கும் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை கேரளாவிலுள்ள கோட்டயம் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகளில் விஜய்க்கு வில்லனாக கேரளாவை சேர்ந்த நடிகர் பினீஷ் பாஸ்டின் நடித்துள்ளார். சமீபத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜு’ படத்தில் வில்லனாக நடித்த பினீஷ் விஜய்யின் தீவிர ரசிகராம்! இவரது வித்தியாசமான கெட்-அப்பை பார்த்து தான் அட்லி இவரை ‘தெறி’யில் வில்லனாக்கியுள்ளார்.

‘‘தெறி’யின் 40 சதவிகித படப்பிடிப்பு கேரளாவில் நடந்திருப்பது குறித்தும் இப்படத்தில் நிறைய மலையாள வசனங்கள் இடம் பெறுவது குறித்தும் இயக்குனர் அட்லி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்! இதை வைத்து பார்க்கும்போது விஜய்யின் ஜோசஃப் குருவிளா கேரக்டர் கேரளா பின்னணியில் வருவது உறுதியாகிறது. தமிழகத்துக்கு அடுத்த படியாக விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பது கேரள மாநிலத்தில் தான் என்று கூறப்படுவதற்கும், விஜய்யின் ஜோசஃப் குருவிளா கேரக்டருக்கும் இடையில் எதாவது சம்பந்தம் இருக்கிறதா என்பது ‘தெறி’ வெளிவந்த பிறகு தான் தெரியவரும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;