‘தெறி’ படத்தை வாங்கிய நடிகர் பிருத்திவிராஜ்!

‘தெறி’ படத்தை வாங்கிய நடிகர் பிருத்திவிராஜ்!

செய்திகள் 30-Mar-2016 4:05 PM IST VRC கருத்துக்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘தெறி’யின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து விட்டதை தொடர்ந்து படம் சென்சார் குழுவினரின் பார்வைக்கு சென்றுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் ‘தெறி’க்கு என்ன சர்டிஃபிக்கெட் என்பது தெரிய வரும். இதுபோன்ற வேலைகள் ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில் ‘தெறி’யின் வியாபார விஷயங்களும் சூடு பிடித்துள்ளது. நமக்கு கிடைத்த தகவலின் படி ‘தெறி’யின் கேரள விநியோக உரிமையை நடிகர் பிருத்திவிராஜின் ‘ஆகஸ்ட் சினிமாஸ்’ நிறுவனம் பெரும் தொகைக்கு கைபற்றியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் வாங்கி வெளியிடும் முதல் தமிழ் படமாம் ‘தெறி’. விஜய் நடிக்கும் படங்களுக்கு கேரளாவிலும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தமிழகத்தை அடுத்து விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருக்கும் மாநிலமும் கேரளா தான் என்று சொல்லப்படுகிறது. தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 அன்று தான் மலையாள புத்தாண்டு தினமான விஷுவும் வருகிறது. அதனால விஜய்யின் ‘தெறி’யை மிகப் பிரமாண்டமான முறையில் கேரளாவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;