Direction : A. R. Rajasekar
Production : Jayaprada Productions, Studio 9 Motion Pictures
Starring : Siddhu, Hansika Motwani
Music : Anoop Rubens
Cinematography : R. D. Rajasekhar
Editing : Suraj Kavi
‘இஷ்க்’ என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற படத்தின் ரீமேக் இந்த ‘உயிரே உயிரே’. இப்படம் மூலம் ஹீரோவாக களமிறங்கியிருக்கிறார் முன்னாள் நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்து! அவருக்கு இப்படம் கை கொடுக்கும் விதமாக அமைந்துள்ளதா?
கதைக்களம்
முதல் சந்திப்பிலேயே ஹன்சிகா மீது சித்துவுக்கு காதல் வருகிறது. நாளடைவில் ஹன்சிகாவுக்கும் சித்து மீது காதல் வருகிறது. ஒரு கட்டத்தில் சித்துவுக்கு தான் காதலிக்கும் ஹன்சிகா தன் எதிரியான அஜெய்யின் தங்கை என்பது தெரிய வருகிறது! அதைப் போலவே அஜெய்க்கும் தெரிய வருகிறது, தன் தங்கையை காதலிப்பவன் தன்னோட எதிரி என்று! காதல் திருமணம் என்றாலும் அது இரு வீட்டார் சம்மதத்துடன் நடக்கும்போது தான் சந்தோஷமான வாழ்க்கை அமையும் என்ற கொள்கையுடைய சித்து, எப்படி அனைவரது சம்மதத்துடன் ஹன்சிகாவை மணம் முடிக்கிறார் என்பதே ‘உயிரே உயிரே’.
படம் பற்றிய அலசல்!
‘காதலித்து திருமணம் செய்வதென்றாலும் அது அனைவருடைய சம்மதத்துடன் நடந்தால் தான் வாழ்க்கை இனிக்கும்’ என்ற ஒரு வரி கதையை, காதல், சென்டிமென்ட், அடி தடி என இயக்கியிருக்கிறார் ராஜசேகர். ஆனால் ரசிகர்களை கவரும் விதமாக திரைக்கதை அமைப்பதில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர்! அழுத்தமில்லாத காட்சி அமைப்புகள், லாஜிக் மீறல்கள் என இடைவேளை வரை மெல்ல நகரும் திரைக்கதை போரடிக்க வைக்கிறது. ஆனால் இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் சூடு பிடிக்கிறது திரைக்கதை. அதன் பிறகு கதையில் வரும் சில திருப்பங்கள் ரசிக்கும் படி அமைந்துள்ளன. அறிமுக ஹீரோ சித்துவை முதலில் ஒரு மென்மையான ஹீரோவாக காட்டி, பிறகு அடி தடியிலும் தூள் கிளப்ப வைத்திருக்கிறார் இயக்குனர். இளசுகளின் மனதை கொள்ளை கொள்ளும் விதமாக படம் முழுக்க அழகாக வரும் ஹன்சிகாவின் கதாபாத்திரமும், ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவும், ஆனூப் ரூபனின் இசையில் அமைந்துள்ள இனிய பாடல்களும் ‘உயிரே உயிரே’வுக்கு கை கொடுத்துள்ளன. ஆனால் 146 நிமிடங்கள் ஓடும் இப்படத்தில் எடிட்டர் அதிக கவனம் செலுத்தவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
நடிகர்களின் பங்களிப்பு
கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் சித்து ரொமான்ஸ், அடிதடி, சென்டிமென்ட் என அனைத்து ஏரியாக்களிலும் குறையில்லாத பங்களிப்பை வழங்கி, தன் தாயாரின் பெயரை காப்பாற்றியிருக்கிறார். ஆனால் அவருடைய குரல் வளத்தில் ஒரு கம்பீரம் இல்லாதது ஒரு குறையே! படம் மழுக்க அழகாக வரும் ஹன்சிகாவின் நடிப்பு வழக்கம் போல! சித்துவின் அக்காவாக வரும் சாயா சிங், ஹன்சிகாவின் அண்ணனாக வரும் அஜெய், அப்பாவாக வரும் ‘ஆடுகளம்’ நரேன் அம்மாவாக வரும் உமா பத்மநாபன் மற்றும் ஜெகன், ரோகிணி ஆகியோரது பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.
பலம்
1. சித்து, ஹன்சிகாவின் பங்களிப்பு
2. ஒளிப்பதிவு, பாடல்கள்
பலவீனம்
1. லாஜிக் விஷயங்களை கடைபிடிக்காத திரைக்கதை அமைப்பு
2. மிகவும் ஸ்லோவாக பயணிக்கும் முதல் பாதி
3. படத்தின் அதிகபடியான நீளம்
மொத்தத்தில்…
இப்படத்தில் எந்த புதுமையான விஷயங்களும் இல்லை என்றாலும் ஹன்சிகாவின் அழகை, இனிய பாடல்களை ரசித்து இரண்டரை மணிநேரம் பொழுதை போக்க விரும்புவோர் இப்படத்திற்கு விசிட் அடிக்கலாம்.
ஒருவரி பஞ்ச் : திரைக்கதைக்கு உயிர் கொடுத்திருக்கலாம்!
ரேட்டிங் : 3.5/10
சிம்பு அடுத்து நடிக்க இருக்கும் ‘மாநாடு’ படம் குறித்த தகவல்களை சமீபத்தில் பதிவு செய்திருந்தோம்....
ஹன்சிகா மோத்வானி கதையின் நாயகியாகநடிக்கும் படம் ‘மஹா’. U.R.ஜமீல் இயக்கும் இந்த படத்தில் சிம்புவும்...
சமீபகாலமாக நயன்தாரா, த்ரிஷா, அமலாபால் உட்பட்ட பெரும்பாலான ஹீரோயின்கள் கதையில் முக்கியத்துவமுள்ள...