சூப்பர்ஸ்டாரின் புகழ் கிரீடத்தில் பதிக்கப்பட்ட மற்றுமொரு வைரக்கல்!

சூப்பர்ஸ்டாரின் புகழ் கிரீடத்தில் பதிக்கப்பட்ட மற்றுமொரு வைரக்கல்!

செய்திகள் 13-Apr-2016 10:30 AM IST Chandru கருத்துக்கள்

40 ஆண்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், திரைத்துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது, என்டிடிவி விருதுகள், மகாராஷ்டிரா அரசின் விருது, இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவில் கொடுக்கப்பட்ட விருது உட்பட பல்வேறு விருதுகளை ரஜினி பெற்றுள்ளார். அதோடு மத்திய அரசின் வழங்கியுள்ள ‘பத்ம பூஷன்’ விருது மூலம் கௌரவிக்கப்பட்டுள்ளார். திரையுலகைத் தாண்டி, பொதுவாழ்க்கையிலும் அவரது பங்களிப்புகள் ஏராளம்.

அந்தவகையில் பத்ம பூஷன் கௌரவத்தைத் தொடர்ந்து, அவரது புகழ் கிரீடத்தில் தற்போது ‘பத்ம விபூஷன்’ என்ற வைரக்கல்லும் பதிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பே இந்த கௌரவத்தை ரஜினி பெறவிருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில், இந்தியாவின் 2வது உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ கௌரவத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் கையால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பெற்றுள்ளார். நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள் பலரும் ரஜினிக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;