விக்ரம் பிறந்த நாளில் ‘இரு முகன்’

விக்ரம் பிறந்த நாளில் ‘இரு முகன்’

செய்திகள் 16-Apr-2016 9:51 AM IST VRC கருத்துக்கள்

‘10 எண்றதுக்குள்ள’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் படம் ‘இருமுகன்’. ‘அரிமா நம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்தை ‘தமீன்ஸ் ஃபிலிம்ஸ்’ பேனாரில் ஷிபு தமீன் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக முதல்முறையாக நயன்தாரா நடிக்கிறார். கூடவே நித்யா மேனனும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். மற்றும் தம்பி ரமையா, கருணாகரன் ஆகியோரும் நடிக்கும் இப்படம் அறிவியல் சம்பந்தப்பட்ட க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ‘அந்நியன்’, ‘ஐ’ போன்ற படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்த விக்ரம் இப்படத்திலும் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் விக்ரமின் பிறந்த நாளான ஏப்ரல் 17-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. மிக வித்தியாசமான முறையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த டிசம்பரில் தொடங்கப்பட்ட ‘இரு முகனி’ன் படப்பிடிப்பு 60 சதவிகிதம் முடிந்து விட்டது. மே 10-ஆம் தேதி வரை சென்னை, காஷ்மீர் ஆகிய இடங்களில் நடைபெறும் படப்பிடிப்பை தொடர்ந்து ‘இருமுகன்’ டீம் வெளிநாடு செல்லவிருக்கிறது. அத்துடன் மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டு இரு முகனை தமிழ் மற்றும் தெலுங்கில் ஜூலை இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;