ஆஸ்திரேலியாவில் உருவாகி வரும் ‘நுண்ணுணர்வு’

ஆஸ்திரேலியாவில் உருவாகி வரும் ‘நுண்ணுணர்வு’

செய்திகள் 16-Apr-2016 3:27 PM IST VRC கருத்துக்கள்

‘பல் மருத்துவ தேர்வு எழுத ஆஸ்திரேலியா செல்லும் ஒருவருக்கு அங்கு இனம் புரியாத பல உணர்வுகள் கலந்த அனுபவம் ஏற்படுகிறது. இந்த அனுபவங்கள் வர காரணம் என்ன? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?’ என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படம் ‘நுண்ணுணர்வு. ‘சக்தி ஸ்கிரீன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மதிவாணன் சக்திவேல் கதாநாயகனாக நடித்து இயக்கி வருகிறார். கதாநாயகியாக இந்திரா நடிக்கிறார். வித்தியாசமாக சுத்தமான தமிழில் ‘நுண்ணுணர்வு’ என்று டைட்டில் வைத்திருக்கும் இப்படம் முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவில் படமாகி வருகிறது. ஏற்கெனவே ‘மகா மகா’ என்ற படத்தை இயக்கியவர் தான் இந்த படத்தின் கதை, திரைக்கதை வசனம், பாடல்கள் எழுதி இயக்கும் மதிவாணன் சக்திவேல்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;