ஓவர்சீஸில் ‘தெறி’ ஓபனிங் கொடுத்த விஜய்-அட்லி!

ஓவர்சீஸில் ‘தெறி’ ஓபனிங் கொடுத்த விஜய்-அட்லி!

செய்திகள் 19-Apr-2016 10:16 AM IST Chandru கருத்துக்கள்

பொதுவாக முன்னணி நடிகர்கள், முக்கிய இயக்குனர்களின் படங்கள் என்றால் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பைப் பெறும். அதிலும் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களுக்கு வெளிநாட்டில் நல்ல வசூல் கிடைக்கும் என்பதால், அப்படங்களின் ஓவர்சீஸ் ரைட்ஸ் பெரிய தொகைக்கு விலைபோகும். தாணு தயாரிப்பில் அட்லி இயக்கி, விஜய் நடித்து கடந்த 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியான ‘தெறி’ படமும் வெளிநாடுகளில் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. எதிர்பார்த்ததைப் போல படமும் பெரிதாக வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக யுகே, யுஎஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ‘தெறி’ படம் வசூல் சாதனை செய்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.

பாலிவுட் டிரேட் அனலிஸ்ட்டான தரண் ஆதர்ஷ், ஆஸ்திரேலியாவில் ஹிந்திப் படங்களுக்கு சரியான போட்டியாக ‘தெறி’ தமிழ் படம் அமைந்துள்ளது என ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் மட்டும் 4 நாட்களில் ‘தெறி’ படம் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை எந்திரன், ஐ படங்கள் மட்டுமே தற்போது ‘தெறி’யைவிட அதிகமாக வசூல் செய்திருக்கிறதாம். அந்த சாதனையையும் வரும் நாட்களில் ‘தெறி’ முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், யுகே.வில் ‘தெறி’ படம் இதற்கு முந்தைய தமிழ் சினிமா சாதனைக¬ள் அனைத்தையும் நான்கே நாட்களில் முறியடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். 4 நாட்களில் கிட்டத்தட்ட 2 கோடியே 10 லட்சம் ரூபாய் வசூல் செய்து, ரஜினியின் ‘எந்திரன்’, ஷங்கரின் ‘ஐ’ ஆகிய படங்களின் யுகே வசூல் ரெக்கார்டை முறியடித்துள்ளதாம் தெறி.

‘தெறி’ படத்திற்கு அமெரிக்க நாடுகளிலும் நல்ல ஓபனிங் கிடைத்திருக்கிறதாம். விமர்சனங்கள் இருவேறாக இருந்தபோதும், ‘தெறி’ படம் யுஎஸ்ஏவில் 4 கோடியே 30 லட்சம் ரூபாயும், கனடாவில் 1 கோடியே 80 லட்சம் ரூபாயும் வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது. மொத்தமாக 4 நாட்களில் 6 கோடிக்கும் மேல் ‘தெறி’ படம் வசூல் செய்துள்ளதாம். எந்திரன், லிங்கா, ஐ படங்களுக்குப் பிறகு அமெரிக்காவில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமைக்குச் சொந்தமாகியுள்ளது ‘தெறி’.

ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு மட்டுமின்றி, ‘தெறி’ படத்திற்கு வெளிநாடுகளிலும் நல்ல ஓபனிங் கிடைத்திருப்பதால் மகிழ்ச்சியில் உள்ளது தாணு, விஜய், அட்லி உள்ளிட்ட ‘தெறி’ டீம். அந்த சந்தோஷத்தை நேற்று பார்ட்டி வைத்தும் கொண்டாடியுள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;