ஷங்கருடன் மீண்டும் இணைந்த வடிவேலு

ஷங்கருடன் மீண்டும் இணைந்த வடிவேலு

செய்திகள் 19-Apr-2016 10:22 AM IST Chandru கருத்துக்கள்

‘கத்தி’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் களம்புகுந்த லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மெல்ல மெல்ல தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்தி வருகிறது. படங்களை தயாரிப்பது, விநியோக உரிமையை வாங்கி வெளியிடுவது என பிஸியாக இருக்கும் லைக்கா, ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘எந்திரன்’ 2ஆம் பாகத்தை தற்போது பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. அதோடு கமலின் ‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் உயிர்ப்பிக்கவும் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்நிலையில், ஷங்கருடன் இணைந்து இன்னொரு படத்தையும் தயாரிக்கவிருக்கிறது லைக்கா புரொடக்ஷன்ஸ். ஷங்கரின் ‘எஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்த ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் தற்போது லைக்காவும் ¬கோர்த்துள்ளது. இந்த செய்தியை அந்நிறுவனத்தின் சிஇஓ ராஜு மகாலிங்கம் உறுதிசெய்துள்ளார். ‘‘வெள்ளைக்கொடிக்கு மீண்டும் வேலை வந்துவிட்டதா? எஸ் பிக்சர்ஸ், லைக்கா இரண்டாம் பாகத்திற்காக இணைந்துள்ளது. பொழுபோக்கு நிச்சயம்!’’ என அவர் ட்வீட் செய்திருக்கிறார்.

வடிவேலு நாயகனாக நடிக்கும் இந்த 2ஆம் பாகத்தையும் சிம்புதேவன் இயக்குவார் எனத் தெரிகிறது.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;