‘குக்கூ’ படத்தை தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜோக்கர்’. ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிர்காஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று மத்தியம் சென்னையிலுள்ள பிரசாத் லேப் திரையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. அப்போது பேசிய எஸ்.ஆர்.பிரபு, ‘‘சமீபகாலமாக நல்ல கருதுள்ள திரைப்படங்கள் வருகிறது. அந்த படங்கள் வெற்றியும் பெறுகிறது. அந்த வரிசையில் ராஜு முருகன் இயக்கிய ‘குக்கூ’ படமும் பேசப்பட்ட பமாகும். அந்த படத்தை நாங்கள் தயாரித்திருக்க வேண்டும். ஆனால் அப்போதிருந்த சூழ்நிலையில் ‘குக்கூ’வை எங்களால் தயாரிக்க முடியவில்லை. அந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாக பேசப்பட்டதோடு பாக்ஸ் ஆஃபீசிலும் நல்ல வசூல் செய்யப்பட்டது. அப்போது ‘குக்கூ’வை தயாரிக்க முடியாமல் போனதால் ஏற்பட்ட வருத்தத்தை அவரது இந்த ‘ஜோக்கர்’ துடைத்துள்ளது. சமூகத்திற்கு தேவையான நல்ல ஒரு கருத்தை கூறும் படமாக ‘ஜோக்கரை அவர் உருவாக்கியிருக்கிறார். ராஜு முருகனின் எழுத்தில் இயக்கத்தில் ‘ஜோக்கர்’ படத்தை தயாரித்திருப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்’’ என்றார்.
எஸ்.ஆர்.பிரபு பேசி முடித்ததும் ‘ஜோக்கர்’ படத்தின் டிரைலரும், இரண்டு பாடல்களும் திரையிடப்பட்டது. அதனை தொடர்ந்து மேடையில் படத்தில் இடம் பெறும், ‘ஓல ஓல குடிசையிலே…’ என்று துவங்கும் பாடலை சீன் ரோல்டன் இசையில் முருகவேல், மது இணைந்து நேரடியாக பாடினார்கள். அதனை தொடர்ந்து இப்படத்தில் பாடியிருக்கும் கிராமப்புற பாடகர்களை மேடையில் இசை அமைப்பாளர் சீன் ரோல்டன் அறிமுகப்பத்தி வைத்த நிகழ்ச்சி அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்தது.
‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜிப்ஸி’. இந்த படத்தில் ஜீவா...
தமிழ் சினிமாவில் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பாக...
அறிமுக இயக்குனர் பாபு தமிழ் எழுதி, இயக்க, அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம் இருவரும் நடிக்க...