‘ஜோக்கர்’ குறித்து இயக்குனர்கள் ராஜு முருகன், பாலா, வெற்றிமாறன்…

‘ஜோக்கர்’ குறித்து இயக்குனர்கள் ராஜு முருகன், பாலா, வெற்றிமாறன்…

செய்திகள் 20-Apr-2016 4:52 PM IST VRC கருத்துக்கள்

சென்னையில் இன்று மத்தியம் நடைபெற்ற ‘ஜோக்கர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தேசிய விருதுபெற்ற இயக்குனர்கள் பாலா, வெற்றிமாறன் மற்றும் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தை சேர்ந்த ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ‘சதுரங்கவேட்டை’ இயக்குனர் வினோத் முதலானோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு ‘ஜோக்கர்’ படத்தையும், படக் குழுவினரவியும் வாழ்த்திப் பேசினார்கள். அப்போது ‘ஜோக்கர்’ படத்தின் இயக்குனர் ராஜு முருகன் பேசும்போது,
‘‘இவ்விழாவுக்கு என் அழைப்பை ஏற்று வந்த இயக்குனர் பாலாவுக்கும், இயக்குனர் வெற்றிமாறனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! நான் இயக்கியுள்ள இந்த படம் எல்லோருக்கும் பிடிக்குமா? இது கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெறுமா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் நிச்சயம் இந்த படம் மக்கள் மனதில் சில விஷயங்களை பதிய வைக்கும். அந்த வகையில் நல்ல ஒரு படத்தை எடுத்திருக்கிற திருப்தி எனக்கு உள்ளது. முதலில் இந்த கதையை தயாரிக்க இயக்குனர் பாலாவும், ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியனும் ரொம்பவும் ஆர்வமாக இருந்தார்கள். ஆனால் வேறு சில காரணகளால் அப்போது அவர்களால் தயாரிக்க முடியவில்லை. அதனை தொடர்ந்து தான் இந்த கதையை தயாரிக்க எஸ்.ஆர்.பிரகாஷ் பாபுவும், எஸ்.ஆர்.பிரபுவும் முன் வந்தார்கள! அவர்கள் தந்த ஒத்துழைப்பில் ‘ஜோக்கரை’ நான் நினைத்தது மாதிரி எடுத்திருக்கிறேன்’’ என்றார்.

இயக்குன்ர் பாலா பேசும்போது, ‘‘ஒரு வேளை இந்த கதையை நான் தயாரித்திருந்தால் இதுவேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் அதனை தரமாக தயாரித்துள்ளதாக கருதுகிறேன். இங்கு இந்த படம் குறித்து பேசிய அனைவரும் மனம் திறந்து பேசினார்கள். அவர்களது வெள்ளந்தியான அந்த பேச்சுக்கே இந்த படம் நன்றாக ஓடும், வாழ்த்துக்கள்’’ என்றார்.

இயக்குனர் வெற்றிமாறன் பேசும்போது, ‘‘இது மிகவும் அக்கரையோடு எடுக்கப்பட்ட ஒரு படம் என்று நினைக்கிறேன். இப்படத்தில் பங்கேற்றிருக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையும் பார்க்கும்போது எனக்கு அப்படி தான் தோன்றுகிறது. நூறு பெரிய படங்கள் வரும்போது அதற்கு மத்தியில் இது மாதிரி ஒரு பத்து படங்கள் வந்தால் நன்றாக இருக்கும். அப்படி வந்தால் தமிழ் சினிமா நன்றாக இருக்கும். இந்த படத்தின் கதைக்கு தேவையான முகங்களை தேடித் தேடி கண்டு பிடித்து நடிக்க வைத்திருக்கிறார் ராஜு முருகன். அவருக்கு என் வாழ்த்துக்கள். அதைப்போல இதில் கதாநாயகனாக நடித்திருக்கும் சோமு உட்பட அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள் என்பதை படத்தின் டிரைலரையும், பாடல்களையும் பார்க்கும்போது உணர்ந்து கொண்டேன். இப்படம் கண்டிப்பாக மாபெரும் வெற்றிபெறும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜிப்ஸி டீஸர்


;