பாட்டை கேளுங்க, பணத்தை அள்ளுங்க!

பாட்டை கேளுங்க, பணத்தை அள்ளுங்க!

செய்திகள் 22-Apr-2016 11:11 AM IST VRC கருத்துக்கள்

தமிழகத்தின் முதல் டி.டி.எஸ்.திரையரங்கம், தியேட்டர் டிக்கெட்டுகளை வீட்டில் இருந்த படியே ஆன்லைனில் பெறும் வசதி என சினிமாவில் பல முதல் முயற்சிகளை தனது அபிராமி திரையரங்க வளாகத்தில் மேற்கொண்டவர் ‘அபிராமி’ ராமநாதன் தான்! அவர் இப்போது மீண்டும் ஒரு புதிய முயற்சியை தான் தயாரித்திருக்கும் ‘உன்னோடு கா’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார். அதாவது இதுவரை ரசிகர்களுக்கு சி.டி.கள் மூலமாக, யு-ட்யூப் மூலமாக கிடைத்து வந்த பாடல்கள் இனி ஒரு குறிப்பிட்ட இணையதளம் வாயிலாக மட்டுமே கேட்க முடியும் என்பது மாதிரியான ஒரு இணையதளத்தை ‘அபிராமி’ ராமநாதனும், பாடலாசிரியர் மதன் கார்க்கியும் இணைந்து உருவாக்கியுள்ளனர். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் doopaadoo.com இந்த இணையதளத்திற்குள் போய் நீங்கள் கேட்கும் ஒவ்வொரு பாடலுக்கும் பணமும் கிடைக்கும் வகையில் இருக்கிறது இந்த புதிய முயற்சி! இதற்காக இந்த இணையதளத்தில் தனிப்பட்ட முறையில் ஒரு அக்கவுண்ட் இருக்கும்.
இந்த அக்கவுண்டில் நீங்கள் கேட்கும் ஒவ்வொரு பாடலுக்குமான பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். அப்படி சேரும் பணத்தை வைத்து நீங்கள் இணையதளம மூலமாக பொருட்களை வாங்கலாம், மொபைல் ஃபோனுக்கு ரீ-சார்ஜ் செய்யலாம்! ஆனால் இந்த இணையதளத்திற்குள் நீங்கள் ஒவ்வொரு முறை செல்லும்போதும் கட்டாயமாக நீங்கள் கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு விளமபரத்தை பார்க்க வேண்டும். மற்ற இணையங்களில் வரும் விளம்பரங்களை ஸ்கிப் செய்வது போல் இந்த விளம்பரத்தை நீங்கள் ஸ்கிப் செய்து விட முடியாது. இந்த விளம்பரதாரர்கள் தரும் பணம் தான் நீங்கள் ஒவ்வொரு முறை பாடல் கேட்கும்போது உங்கள அக்கவுண்டுக்கு வந்து சேரும் பணம்! இந்த புது முயற்சியில் முதன் முதலாக இடம் பெறும் பாடல்கள் ‘அபிராமி’ ராமநாதன் தயாரித்து, சத்யா இசை அமைத்துள்ள ‘உன்னோடு கா’ படத்தின் பாடல்கள் தான்! நேற்று வெளியான இப்படத்தின் பாடல்களை மேற்குறிப்பிட்ட இணையத்திற்குச் சென்று நீங்கள் கேட்கலாம், பணத்தை அள்ளலாம்! இந்த இணையத்தை உருவாக்க பாடலாசிரியர் மதன் கார்க்கி தலைமையில் கிட்டத்தட்ட 35 தொழில்நுட்ப கலைஞர்கள் கடந்த சில மாதங்களாக பணியாற்றி இந்தியாவிலேயே முதல் முறையாக இதனை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த இணையதளம் வாயிலாக பாடல்கள் கேட்கும் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அந்த பாடலுக்கு சொந்த காரர்களான அத்தனை பேருக்கும் பணம் கிடைக்கும் விதமாக இந்த புதிய முயற்சி உருவாக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

யார் இவர்கள் - டீஸர்


;