தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற த்ரில்லர் படம் ‘க்ஷணம்’.இப்படத்தின் தமிழ் ரீ-மேக் உரிமையை கைபற்றியிருக்கிறார் சிபிராஜ். இதனை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார் சிபிராஜ். தெலுங்கில் ஆத்வி சேஷ் ஹீரோவாக நடிக்க, ரவிகாந்த் இயக்கிய இப்படத்தின் ஹிந்தி உரிமையை சல்மான் கான் வாங்கியிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதுவரை முன்னணி நடிகர்கள் நடித்த படங்களின் ஹிந்தி உரிமையை வாங்கி நடித்து வந்த சல்மான் கான், ஒரு சாதாரன ஹீரோ நடித்த படத்தின் உரிமையை பெறுவது இது தான் முதல் முறை என்று கூறப்படுகிறது. சாதாரண ஹீரோ நடித்த படம் ‘க்ஷணம்’, என்றாலும் அதன் கதை சல்மானை ரொம்பவும் கவர்ந்ததாம்! ‘க்ஷணம்’ படத்தின் தமிழ் உரிமையை கைபற்றியுள்ள சிபிராஜ், அதனை சொந்தமாக தயாரித்து, நடிக்கவிருக்கிறாராம். ‘நாய்கள் ஜாக்கிரதை’ வெற்றிப் படத்தை தொடர்ந்து சிபிராஜ் நடித்துள்ள ‘ஜாக்சன் துரை’ விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறிமுக இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் படம் ‘வால்டர்’. அதிரடி ஆக்ஷன் த்ரில்லர்...
‘ஜாக்சன் துரை’, ‘சைத்தான்’, ‘சத்யா’ ஆகிய படங்களை தொடர்ந்து பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, இயக்கி வரும்...
சிபிராஜ் நடிப்பில் ‘ரங்கா’ மற்றும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத ஒரு படம் ஆகியவை ரிலீஸுக்கு...