‘‘சூப்பர்ஸ்டார் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது!’’ - கபாலி நாயகி!

‘‘சூப்பர்ஸ்டார் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது!’’ - கபாலி நாயகி!

செய்திகள் 26-Apr-2016 10:10 AM IST Chandru கருத்துக்கள்

அழகுராஜா, வெற்றிச்செல்வன் ஆகிய படங்களின் மூலம் தமிழில் கால்பதித்த ராதிகா ஆப்தே, வடஇந்தியாவில் ரொம்பவே பிரபலம். அவர் நடித்த ‘அகல்யா’ என்ற குறும்படத்தை யு ட்யூப்பில் இதுவரை 57 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை கண்டுகளிக்கப்பட்டுள்ளதே அவரின் புகழுக்குச் சான்றிதழ். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிக்கும் ‘கபாலி’ படத்தின் நாயகியாகவும் இந்தியாவில் பிரபலம் அடைந்திருக்கிறார். ரஜினியுடன் தான் நடித்த அனுபவங்களை சமீபத்தில் பகிர்ந்து கொண்ட ராதிகா ஆப்தே,

‘‘சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்தது மிகப்பெரிய அனுபவமாக எனக்கு அமைந்தது. அவர் ஒரு சுறுசுறுப்பான மனிதர். அவர் இடத்தை நிச்சயம் யாராலும் நிரப்ப முடியாது!’’ என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு ‘கபாலி’ படத்தின் ரிலீஸுக்காக தான் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;