10 மணி நேரத்தில் ‘தொடரி’யின் டப்பிங்கை முடித்த தனுஷ்!

10 மணி நேரத்தில் ‘தொடரி’யின் டப்பிங்கை முடித்த தனுஷ்!

செய்திகள் 26-Apr-2016 10:48 AM IST VRC கருத்துக்கள்

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘தொடரி’ படத்தின் டப்பிங் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தனுஷ், தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங் வேலைகளை 10 மணி நேரத்தில் பேசி முடித்துள்ளார். நேற்று பிற்பகல் 3 மணிக்கு துவங்கிய டப்பிங்கை இன்று அதிகாலை 1.30 மணி அளவில் முடித்து விட்டதாக தனுஷே ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில், ‘தொடரி’யை நீங்கள் பார்க்கும் நாளை நானும் ஆவலாய் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ஜி.தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;