‘கொள்ளிடம்’ என்றால் என்ன?

‘கொள்ளிடம்’ என்றால் என்ன?

செய்திகள் 26-Apr-2016 11:20 AM IST VRC கருத்துக்கள்

‘‘மனித இனத்தில் இருபது சதவிகிதம் பேர் அழகாக பிறக்கிறாகள். மீதம் உள்ள எண்பது சதவிதம் பேர் அழகு குறைவாக பிறக்கிறார்கள். அழகு குறைவாக இருக்கிற எண்பது சதவிகிதம் பேர் ஒருதலையா தான் காதலிக்க முடிகிறது. காதலை சொல்ல நினைக்கும் போதெல்லாம், ’இந்த மூஞ்சிக்கு இது தேவையான்னு” நம்ம மனசாட்சியே கேள்வி கேட்டு கொலை செய்யும். அந்த கொலைக்கு பேர் தான் ‘கொள்ளிடம்’. இதுவே ‘கொள்ளிடம்’ படத்தின் கதைக்கரு’’ என்கிறார் இப்படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்கும் நேசம் முரளி. இப்படத்தில் நேசம் முரளியுடன் லூதியா, ராசிக், வடிவுக்கரசி, ராமச்சந்திரன், வேல்முருகன் ஆகியோரும் நடிக்க, இப்படத்திற்கு ஆர்.ராஜகோபால் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்டா மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இளமி - டிரைலர்


;