இந்திய படங்களின் வசூலை ஓரங்கட்டிய ‘தி ஜங்கிள் புக்’

இந்திய படங்களின் வசூலை ஓரங்கட்டிய ‘தி ஜங்கிள் புக்’

செய்திகள் 26-Apr-2016 11:24 AM IST Chandru கருத்துக்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகமெங்கும் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படம் ஏப்ரல் 8ஆம் தேதி இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. உலகளவில் தற்போது வரை அரை பில்லியன் டாலர்களை வசூல் செய்துள்ள இப்படம், இந்தியாவில் மட்டும் இதுவரை 144 கோடிகளை வசூல் செய்திருப்பதாக பாலிவுட் டிரேட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதோடு 2016ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்துள்ள படம் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது தி ஜங்கிள் புக்.

அக்ஷய் குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஏர் லிப்ட்’ திரைப்படம் 127 கோடி ரூபாயும் (நெட்), ஷாருக்கான் நடிப்பில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ‘ஃபேன்’ படம் இதுவரை 80 கோடி ரூபாயையும் (நெட்) வசூல் செய்துள்ளது. இந்த இரண்டு படங்களும் 2016ஆம் ஆண்டு, இந்தியாவில் அதிகம் வசூல் செய்துள்ள மற்ற 2 படங்களாகும். இப்போதும் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படம் வெற்றிகரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால் ஒட்டுமொத்தமாக 200 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.0 ட்ரைலர்


;