‘மருது’ ஆடியோ, டிரைலர் எப்போது?

‘மருது’ ஆடியோ, டிரைலர் எப்போது?

செய்திகள் 26-Apr-2016 12:16 PM IST VRC கருத்துக்கள்

‘கொம்பன்’ படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கியுள்ள படம் ‘மருது’. விஷால், ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டது. ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் அன்புச் செழியன் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை வருகிற 29-ஆம் தேதி வெளியிடவிருக்கிறார்கள். கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கிய ‘கொம்பன்’ படத்தை போலவே இப்படமும் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ளது. இப்படத்தில் முக்கியமான ஒரு கேரக்டரில் ராதாரவியும் நடித்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டுக்கு பிறகு ‘மருது’வை அடுத்த மாதம் (மே) 20-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;