நாய் கடத்தலை பற்றிய படம்!

நாய் கடத்தலை பற்றிய படம்!

செய்திகள் 27-Apr-2016 11:06 AM IST RM கருத்துக்கள்

‘ரிச் மீடியா சொல்யூஷன்’ என்ற புதிய பட நிறுவனம் சஹானா ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஜூலியும் நாலு பேரும்’. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் சதீஷ் வி.ஆர். இந்த படம் குறித்து இயக்குனர் சதீஷ் கூறும்போது, ‘‘இது சர்வதேச அளவில் நடக்கும் நாய் கடத்தலை பற்றிய படம். அது மட்டு மின்றி இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக எடுக்கப்படும் காமெடி படமாகும். இதில் விஜய் டி.வி.புகழ் அமுதவாணன் மற்றும் ஜார்ஜ் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். ஜம்முவை சேர்ந்த ரீனா என்ற பெண் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அத்துடன் இப்படத்தின் ஹீரோ அமெரிக்காவிலிருந்து கொண்டு வந்த ஜூலி என்ற கதாபாத்திரத்தில் Beagle வகையை சேர்ந்த லக்கி என்ற நாயையும் நடிக்க வைக்கப்படுகிறது. இப்படத்தின் மூலம் நான் இயக்குனராக அறிமுகமாவதைப் போல ஒளிப்பதிவாளராக கே.ஏ.பாஸ்கரும், இசை அமைப்பாளராக ரகு ஸ்வரனும் அறிமுகமாகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜூலியும் 4 பேரும் - டிரைலர்


;